Thursday, January 7, 2010

உலகிற்கு வாசமில்லை

எத்தனைதான் தவிர்க்க நினைத்தாலும்
அந்த மூன்று நாட்களின் தீட்டு நெடி
என்னைச் சுற்றிலும் சங்கடத்துடன்

கடந்து செல்கையில்
எவ்வளவு தான் மூக்கைப் பொத்தினாலும்
தள்ளிக்கொண்டு உள்நுழையும்
ஒயின் கடையின் புளிச்ச நாற்றம்

நீண்ட தொலைவு பயணித்து உள்நுழைந்து
அம்மாவைக் கட்டித் தழுவுகையில்
பரவும் அவளின் பிரத்தியேகமான
வியர்வையும் சமையலும் கலந்த வாசனை

மூக்கின் சம்பாஷணைகளைக்
கூர்ந்திருக்கும் நேரத்தில்
நினைவில் எழுந்தது
மூக்கறுந்த சூர்ப்பனகையின்
வாசமில்லா உலகம்

2 comments:

  1. Goog impurument congratulation keep it up



    Thanks
    Madhankumar.M

    ReplyDelete
  2. hi mam this is nice thought.......
    By
    E.v.Karthik MCA

    ReplyDelete