Thursday, January 7, 2010

கண்ணியும் கவண்கற்களும்

வானிலிருந்து விண்மீன்கள்
உதிர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
இருண்ட காட்டில்
ஓடும் மான்களில்
கண்ணிக்குச் சிக்காதவை
சில மட்டுமே
நீந்திக் கொண்டிருக்கும்
பொன் மீன்களைத்
துழாவிக் கொண்டிருக்கின்றன வலைகள்
பறக்கும் புறாக்களைக்
குறி பார்த்துக் கொண்டிருக்கும்
கவண்கற்கள்
அணையாதிருக்கும்
தீயின் கங்குகள்
சீதைகளைத் தேடி!

No comments:

Post a Comment