Monday, January 17, 2011

ம.பொ.சி.யின் "தமிழன் குரல்" இதழ்த் தொகுப்பு - மூன்று நூல்கள்



தமிழக எல்லை மீட்பில் (சென்னை, திருத்தணி, குமரி) முக்கியப் பங்காற்றியவரும், தமிழரசுக் கழக நிறுவனரும், தமிழ்த் தேசிய முன்னோடியுமான சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் அவர்கள் 1954 - 1955  காலகட்டத்தில் நடத்திய 'தமிழன் குரல் ' என்ற மாத இதழ் அவருடைய பெயர்த்தி தி.பரமேசுவரியால் தொகுக்கப்பட்டு அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், படைப்பிலக்கியம் என்று மூன்று நூல்களாக சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.  

1. தமிழன் குரல்  - அரசியல் கட்டுரைகள்

"எங்கெங்கும் தமிழ் இனத்தவர் போர் முழக்கம் செய்து வரும் நேரத்தில்தான் அவர்களுக்கெல்லாம் ஆதரவாகப் பணிபுரியத் 'தமிழன் குரல்' வெளிவருகிறது. தமிழகம் தனி ஆட்சி பெறவேண்டும்; துண்டுபட்ட தமிழ்ப் பகுதிகளெல்லாம் தாய்த் தமிழகத்தோடு ஒன்றுபடவேண்டும்; தமிழகத்தில் தமிழ் ஒன்றே ஆட்சி மொழியாதல் வேண்டும்..."                                   - ம.பொ.சி. (ஆகஸ்டு 1954)

இவ்விதழில் ம.பொ.சி. எழுதிய தலையங்கம், கண்ணோட்டம் (துணைத் தலையங்கம்) என்ற தலைப்பிலான கட்டுரைகளோடு,   ம.பொ.சி., மு.வ., நாமக்கல் கவிஞர், சோம.லெ., ஏ.ஜி.வேங்கடாச்சாரி, ரா.பி.சேதுப்பிள்ளை,     வெ. சாமிநாத  சர்மா, குயிலன் ஆகியோர் எழுதிய அரசியல், வரலாற்றுக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

 
தமிழ்த் தேசியத்தின் குரல் மீண்டும் வலுவாய் எழும்பத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், காலத்தின் குரலாய்த் 'தமிழன் குரல்' நூல்வடிவில் வருவது மிகச் சரியானதாகும். 


மொத்த பக்கங்கள் : 272;                                                     விலை : ரூ.150/-.



2. தமிழன் குரல்  - இலக்கியக் கட்டுரைகள்

"தமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எலாம் நிரம்பியுள்ள களஞ்சியம்"    - ம.பொ.சி.
அரசியல் இதழாக மட்டுமில்லாமல், இலக்கியம் பேசும் இதழாகவும் இருந்த 'தமிழன் குரலி'ல்  ம.பொ.சி.யுடன் நாமக்கல் கவிஞர், ரா.பி.சேதுப்பிள்ளை,           வெ.சாமிநாத  சர்மா, அ.ச.ஞா., பெ.தூரன், கி.வா.ஜ., கா.பொ.ரத்தினம், நா.பார்த்தசாரதி, டி.கே.சண்முகம், குன்றக்குடி அடிகளார், தெ.பொ.மீ., சோம.லெ., ந.சஞ்சீவி, பி.ஸ்ரீ. ஆகியோரும் பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். 
சங்க இலக்கியம், குறளும் சிலம்பும், பிற்கால இலக்கியம் என வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. 


மொத்த பக்கங்கள் : 215;                                              விலை : ரூ.125/-.



3. தமிழன் குரல்  - படைப்பிலக்கியம் 

'தமிழன் குரல்' இதழில் வெளிவந்த கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பல்துறைக் கட்டுரைகள் ஆகியன படைப்பிலக்கியம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 


தண்டபாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, டி.கே.சண்முகம், தெ.பொ.மீ., சோம.லெ., பெ.தூரன், வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, கவிஞர் கா.மு.ஷெரீப், ர.சண்முகம் (ரசம்), குயிலன்  ஆகியோர் 'தமிழன் குரலி 'ல் எழுதியுள்ள படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
மொத்த பக்கங்கள் : 272;                                             விலை : ரூ.145/-.


இம்மூன்று நூல்களும் சந்தியா பதிப்பகத்தில் கிடைக்கும்.

முகவரி
சந்தியா பதிப்பகம்,
புஎண்: 77 , 53 ஆவது தெரு
9 ஆவது அவென்யூ,
அசோக்  நகர்,
சென்னை  - 600 083.
இணைய தளம்: www.sandhyapublications.com
மின்னஞ்சல்     : sandhyapublications@yahoo.com 
தொலைபேசி எண்: 044 - 24896979 . 


தொகுப்பாசிரியரின் வலைப்பூ: www.tparameshwari.blogspot.com 
 தொகுப்பாசிரியரின் மின்னஞ்சல்: thi.parameswari@gmail.com

9 comments:

  1. நீங்கள் தமிழாசிரியை என்பதால் உங்கள் வலைப்பூவிற்கு பின்னூட்டமிட பயமாக இருக்கிறது. சொற்பிழைகள் ஏராளம் என்று தலையில் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற கவலைதான். எனினும் மனதை திடப்படுத்திக் கொண்டு இந்த பின்னூட்டம்...

    தப்பிருந்தால் மன்னிப்பேன் என்று கொட்டு முரசே...

    ReplyDelete
  2. நீங்கள் தொகுத்த புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி பாரத்..பாரதி, தமிழ் உதயம். பிழை இருந்தால் நான் மாணவர்களைக் குறை கூறும் ஆசிரியை அல்ல. பெரும்பான்மைப் பிழை ஆசிரியருடையதே. நிச்சயமாகக் கை ஓங்கும் பழக்கம் என்னிடம் இல்லை மக்களே. நீங்கள் பயப்படாமல் பின்னூட்டமிடலாம்.

    ReplyDelete
  4. புத்தகங்கள் வாங்கிப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன்...

    ReplyDelete
  5. நல்ல பணி தொடருங்கள்

    ReplyDelete
  6. நன்றி சந்ரு, செந்தில். செந்தில் சார், கட்டாயமாக உங்கள் மின்னஞ்சலை விரைவில் எதிர்பார்க்கிறேன். அது எனக்கு அடுத்து செய்ய வேண்டிய பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவும்.

    ReplyDelete
  7. அய்யய்யோ .. தமிழ் டீச்சரா? தப்பா கமெண்ட் போட்டா அடிப்பீங்களே.. எஸ்கேப்

    ReplyDelete
  8. உங்கள் புத்தகங்கள் விற்பனையில் சாதிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete