Monday, October 10, 2011

உள்ளங்கை குருவி

நன்றி: கல்கி

உள்ளங்கைகளில்
குருவி போன்றதொரு சிறிய பறவை
அமர்ந்திருக்கும் அந்தப் படம்
வெகுவாகக் கவர்ந்தது என்னை
இப்படியும் அப்படியுமாய் அசைக்கையில்
எழும்பும் அதன் சிறகுகள்தான்
அதை வாங்கத் தூண்டியதோ என்னவோ?
நீண்ட நேரம் விலை பேசி
கையிருப்பு முழுவதையும் செலவழித்து
வாங்கிய அந்தப் படத்துடன்
நடந்தே வீடு சேர்ந்தேன்
வாங்கிய நாளிலிருந்தே
அறைக்குள் நுழையும் போதெல்லாம்
அசைத்து அசைத்து அதன் பறத்தலுக்கான
யத்தனிப்பை ரசித்த எனக்கு
இப்போது அது அலைக்கழிப்பாக மாறியிருந்தது
இதோ இந்தக் கணத்தில்
நான் அதன் பறத்தலுக்காய்க் காத்திருக்கிறேன்.

- தி.பரமேசுவரி 

3 comments:

  1. அருமையாக இருந்தது... குழந்தை மனமும் முதிர்ச்சி மனமும் போட்டியிடுவதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. முயற்சிகள் யாவும் ரசிக்கும் படியாக இருக்கலாம் ஆனால்
    முன்னேற்றமே இல்லா முயற்சியே நீண்ட தொடர்ச்சி எனும்போது
    முன்னிருக்கை அமர்வுக்கு தானே இட்டுச் செல்லும்....

    கவிதை அருமை..
    நன்றிகள் சகோதிரி.

    ReplyDelete