ஒவ்வொரு நாளும் யாரோ
தொலைந்து கொண்டே இருக்கிறார்கள்
தொலைய வேண்டும் என்றே …
புத்தக்க் கண்காட்சி,
தீவுத் திடல் பொருட்காட்சி என
எங்கு போனாலும்
யாரோ யாரையோ
தேடிக் கொண்டே இருக்கிறார்கள்
ஒலிபெருக்கி அலறிக் கொண்டே இருக்கிறது
தொலைத்தவர்கள், தொலைந்தவர்களை
வருத்தத்துடன், கண்ணீருடன்,
பதைப்புடன், கோபத்துடன்,
வெறுப்புடன், அசதியுடன்,
தேடிக் கொண்டே இருக்கிறார்கள்
ஒருவர் கிடைத்த அடுத்த கணத்தில்
அடுத்தவர் தொலைவது இயல்பாய் நேர்கிறது!
No comments:
Post a Comment