காலையில் எழுகையிலேயே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையைத்
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கு
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து
டி.வி. காம்ப்பியருக்குப்
பாவமாய்ப் பதில் சொல்வாள்
‘ஹவுஸ் வொய்ப்தான் நான்’
No comments:
Post a Comment