கடந்த டிசம்பர் 5, ஞாயிறு அன்று இலக்கியக் களம் அமைப்பின் முதல் கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது. ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் நூற்றாண்டு நினைவு நாள் மற்றும் காஞ்சீபுரம் இலக்கிய வட்டம் வெ. நாராயணனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு இருவரது புகைப்படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இக்கூட்டத்திற்கு எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்கள் தலைமை வகித்தார். பாரதி விஜயன் வரவேற்றார். கவிஞர் அமுதகீதன் இலக்கியக் களம் அமைப்பின் நோக்கங்களைக் கூறினார். டாக்டர் சீனிவாசன், வெ. நாராயணனைப் பற்றியும் காஞ்சி அண்ணல் டால்ஸ்டாய் பற்றியும் பேசினர்.
எழுத்தாளர் இராசேந்திர சோழன் டால்ஸ்டாய் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கியக் களம் அடுத்து நடத்த இருக்கும் ம.பொ.சி. குறித்த கூட்டம் பற்றி காஞ்சி அமுதன் பேசினார். கவிஞர் அமுதகீதன் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அந்த அமைப்பை பற்றி விரிவாக கூறுங்களேன்
ReplyDeleteஎன்ன..புதிய அமைப்பு தொடங்கிட்டீங்களா.. என்னையும் ஒருதபா கூப்டுங்க..
ReplyDeleteமகிழ்ச்சி..
ReplyDeleteமகிழ்ச்சி, பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteநல்ல களம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகருணா கத்தியைப் போட்டுட்டீங்களா?
ReplyDeleteஇது புதிய அமைப்பு தான். காஞ்சியில் தொடங்கப்பட்டுள்ளது. என் நண்பர்கள் இலக்கிய விமர்சகர் எக்பர்ட் சச்சிதானந்தம், கவிஞர் அமுத கீதன், காஞ்சி அமுதன் ஆகியோர் தொடங்கியுள்ளனர். சங்கவி, ராம்ஜி, எல்.கே, ஹரீஸ், கருணா உங்களுக்கும் நன்றி. இன்னும் விரிவாக அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.
ReplyDelete