Wednesday, January 19, 2011

சிறகுகள் கோதும் சாளரம்

                                            மேலும் தீட்டிக் கூராக்குகிறது

                                            சிறிய மூக்கை

                                            தொட்டி நீரில் அமிழ்த்திக்

                                            கோதுகிறது சிறகுகளை

                                            தானியங்களைக் கொத்தியும்

                                            நீர் குடித்தும் பறந்தும்

                                            எழுந்தும் அணைத்தும்

                                            செய்யும் சில்மிஷங்கள்

                                            குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்

                                            செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை



                                            சன்னலில் பதித்த முகத்தில்

                                            பதியும் கோடுகள்

                                            வலிக்க வலிக்க

                                            ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

11 comments:

  1. தலைப்பே ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

    ReplyDelete
  2. அற்புதமான கவிதை...

    ReplyDelete
  3. நகரத்து வீடுகளின் ஜன்னல்களில் அபூர்வமாய் வந்தமர்கிற சிட்டுக்குருவியென இக்கவிதையும் ...

    ReplyDelete
  4. நன்றி தமிழ் உதயம், தென்றல் சரவணன், சங்கவி, செந்தில். உங்கள் பின்னூட்டங்களெனக்கு ரொம்ப உற்சாகத்தை அளிக்கிறது.

    ReplyDelete
  5. முடக்கி வைக்கப்பட்ட மழலை?...

    நல்ல கவிதை. படிக்கும் போதே , காட்சிகள் மனத்தில் விரிகிறது..

    ReplyDelete
  6. அமைதிச் சாரல், பாரத்..பாரதி, நன்றி.

    ReplyDelete
  7. மிக அழகான ரசனை தோழி...

    ReplyDelete