Sunday, February 20, 2011

பிரபாகரன் தாயாரின் மரணம்…

தகவல்: இனியொரு...

கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.

கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு கருணாநிதி அரசு மறுத்தது தெரிந்ததே.

மக்களின் அன்றாட மனிதாபிமான செயற்பாடுகள் கூட அதிகாரவர்க்க அரசியலின் மரணித்துப் போனதற்கு பிரபாகரனின் தாயார் ஒரு குறியீடு!

3 comments:

  1. வீர தவப்புதல்வனை பெற்ற என் அன்னையே, உம் மறைவு கேட்டு துடிதுடித்துப் போனோம். தாயே என்றேன்றும் எம் இதயத்தில் தெய்வமாய் குடிகொண்டிருப்பீர்கள் என் அன்னையே. இரத்தக் கண்ணீரால் அஞ்சலிக்கின்றேன் என் அன்னையே.

    ReplyDelete
  2. வீரத்தாய்க்கு எங்கள் வீர வணக்கம்.
    சிறு திருத்தம்.சிகிச்சைக்கு கருணாநிதி அரசு தடுத்தது.தடுத்தது மதிய அரசு என்பது பாமரனுக்கும் தெரியும்.பேராசிரியைக்கு தெரியாதது வருத்தம் தான்.

    ReplyDelete
  3. நடுவண் அரசிலும் தி.மு.க. ஒரு அங்கம்தா​னே! கருணாநிதிக்குத் ​தெரியாமலா அம்மா சிகிச்​சைக்குத் தமிழகம் வந்ததும் திருப்பி அனுப்பப்பட்டதும் நடந்தது? பார்வதி அம்மா தமிழகத்தில் இருந்தால் தமிழின உணர்வாளர்கள் அவ​ரைக் காணத் துடிப்பார்கள் என்பதும், அது தனக்கு ஆபத்து வி​ளைவிக்கும் என்பதும் கருணாநிதியின் அச்சம். இறுதிக் கட்ட ஈழப் ​போரின் ​​​போதும் கருணாநிதி ​செய்த இரண்டகமும் பாமரனுக்கும் ​தெரியும். என்.டி.​செல்வத்துக்குத் ​தெரியாதது ஆச்சரியந்தான்.

    ReplyDelete