Saturday, December 10, 2011

ஊழிக்கூத்து

நன்றி: அம்ருதா



முலைகளில் இருந்து பீறிடுகிறது
செந்தழல் குழம்பு

வெடித்துப் பறக்கின்றன சதைத் துணுக்குகள்

காற்றில் அலைவுறும் மயிர்க்கற்றைகள்
அடித்துத் தெறிக்கிறது நிலவை

ஆற்றொணாத் துயரத்துடனும்
அடக்கவொண்ணாச் சீற்றத்துடனும்
பெருகும் நெருப்புக் குழம்பு
பரவுகிறது கானகமெங்கும்

ஒற்றைக் காலெடுத்து வானமளக்கிறேன்
சீற்ற மூச்சில் பறக்கின்றன நட்சத்திரங்கள்

அடுத்த அடியை மண்ணில் பதிக்க
வெடிக்கிறது பாதாளம்

துரோகக் கத்திகள் அறுத்தெடுத்த
சிரமேந்தித் தொடங்குகிறேன் ஊழிக்கூத்து.


No comments:

Post a Comment