11/12/2011 ஞாயிறு மாலை சென்னை கே.கே.நகரில் 'கேணி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமூக ஆய்வாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேரா.அ.மார்க்ஸ் பேசினார். உரை மற்றும் உரையாடல் எனும் வடிவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தனது இளமைக்காலம், குடும்பச் சூழல், கல்வி, வாசிப்பு, சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் தமது கருத்தை பதிவு செய்தார்.
முன்னதாக பத்திரிகையாளர் ஞாநி வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஞாநி மற்றும் எழுத்தாளர் பாஸ்கர்சக்தி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment