Monday, December 12, 2011

அந்தி மந்தாரை


நன்றி: அம்ருதா

பலிபீடத்திற்கான காத்திருப்பில்
நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களை
கடித்துத் தின்று கொண்டிருக்கிறான் அவன்

இனியெப்போதும் கிடைக்காத
அந்த ஆழ்ந்த முத்தத்தைக்
கைகளால் தாவிப் பிடித்துப் பரிதவிக்கிறான்

துயரத்தின் திசையிலிருந்து பொங்கும் இசை
மூழ்கடிக்கிறது அந்த இடத்தை

கற்பனையில் தன் அந்தரங்க ஆசைகளுக்கு
உருவங் கொடுத்து உலவ விடுபவனை
இரக்கம், கோபம், ஆற்றாமை, வெறுப்பினை
உமிழும் கண்கள்
வெறித்துப் பார்க்கின்றன

அவனுடைய வார்த்தைகள்
மெல்லப் புதைகிறது மௌனக் கல்லறையில்

காலத்தின் மாய வீச்சுக்குள்
கரைந்து கொண்டிருக்கிறது நிகழ்காலம்

கனவில் பெருகும் குருதித் துளிகளால்
தன் கடைசிக் கவிதையை அவன் எழுதத் தொடங்குகிறான்.


   




2 comments:

  1. Some expressions are very good. Especially, 'Palipeetaththirkaana Kaathiruppu', 'Thuyaraththin Thisaiyilirunthu Pongum Isai' and 'Vaarththaikal Mellap Puthaikirathu Mounak Kallaraiyil'...
    In Bible, 'the word became flesh'... But here, 'words get buried in tomb'... Vaarthaiyin verupatta seyal vadivangal...

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகள் வாசித்தேன். ஒரு கவிமனசின் பெண்மை தரிசனமாகும் அனுபவத்தில் மகிழ்ந்தான். சென்ற வாரம் பாலு மகேந்திராவின் அந்தி மந்தாரை பார்த சூட்டோடு உங்கள் கவிதை வாசித்தேன். முதிரும் இருப்பை கலையாக வனைந்திருக்கிறீர்கள்.
    கற்பனையில் தன் அந்தரங்க ஆசைகளுக்கு
    உருவங் கொடுத்து உலவ விடுபவனை
    இரக்கம், கோபம், ஆற்றாமை, வெறுப்பினை
    உமிழும் கண்கள்
    வெறித்துப் பார்க்கின்றன

    ReplyDelete