நன்றி : தாமரை ஜூன் 2010
உடலில் செருகப்பட்ட ஊசிகளெடுத்துத்
தைத்துக் கொள்கிறேன்
மௌனத்தாலான ஓர் ஆடையை
சிறு வயது முதல்
என்னுடனே வளர்கிறது அதுவும்
என்னை விட்டு எக்கணமும் பிரியாமல்
உடலோடு ஒட்டியிருக்கிறது
சில நேரம் மூச்சுத் திணறினாலும்
அப்பாதுகாப்பை விரும்புகிறேன்
மரணத்தில் கூடக் கோடித்துணியெனப்
போர்த்தப்பட்டுப் பயணிக்கிறது உடன்.
No comments:
Post a Comment