பனி மூடி இருக்கும் வனம்
நிறை சூலியாய்க் காடு
பூத்திருக்கும் மலர்கள்
அடர்த்தியான மரம் செடி கொடிகள்
திரியும் விலங்குகள்
வெள்ளி நீர்வீழ்ச்சிகள்
பனியில் குளிர்ந்து
வெயிலில் கருகி
மழையில் நனைந்து
அசையா மோனத்தில்
சூன்யத்தின் நிழல்
தேடித் திரும்புகிறது
சக மனுஷியை!
No comments:
Post a Comment