அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பெண்ணென்றவுடன்
சோக முகம் காட்டுவார்கள்
சுயம்புவாய்த் தன்னைச்
சிங்காரித்துக் கொள்பவளை
முகமூடியிட்டு
மௌனமுகம் புனைவார்கள்
வாழ்க்கையின் மறுபக்கம் காட்டுவதாய்
நகைமுகம் காட்டி
நரகத்தில் தள்ளுவார்கள்
அவளுக்கு வாய்த்தது அவ்வளவே
என்று விசனிப்பார்கள்
மேலொரு தீக்கங்கு எறிந்து விட்டு
நானாவித மெய்ப்பாடுகளுடன்
கடமை முடிந்ததாய்
அபிநயிப்பார்கள்
சுபம்!
True!
ReplyDelete