Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 25, 2012

இரண்டாம் ஆப்பிள்

நன்றி : கல்கி

நிசப்தமான அந்தக் காட்டுக்குள்தான்
இன்னும் சுற்றித் திரிகின்றனர் ஆதாமும் ஏவாளும்
இப்போது அவர்கள் தழைகளாலான
ஆடையுடனும் அணிகலன்களுடனும்..

அணில்களும் தும்பிகளும் உள்நுழைந்து
வெளியேறும் அந்தத் தொலைதூர வீடு
அவர்களுடையது.

பெயரிடப்படாத அவர்களின் குழந்தை
முயல்களுடனும் உள்ளான்களுடனும்
விளையாடிக் களிக்கிறது கொன்றை மரத்தின் கீழே.

இலைகளின் சலசலப்பே இசையாகும் ஒரு பொழுதில்
மீண்டுமொரு ஆப்பிள் கொடுக்கப்படுகிறது ஆதாமிடத்தில்.

ஒளி மங்கிய மாலையில்
இருளுடை தரித்த அக்குடும்பம்
பயணிக்கிறது மற்றொரு கானகம் தேடி...

Monday, December 12, 2011

அந்தி மந்தாரை


நன்றி: அம்ருதா

பலிபீடத்திற்கான காத்திருப்பில்
நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களை
கடித்துத் தின்று கொண்டிருக்கிறான் அவன்

இனியெப்போதும் கிடைக்காத
அந்த ஆழ்ந்த முத்தத்தைக்
கைகளால் தாவிப் பிடித்துப் பரிதவிக்கிறான்

துயரத்தின் திசையிலிருந்து பொங்கும் இசை
மூழ்கடிக்கிறது அந்த இடத்தை

கற்பனையில் தன் அந்தரங்க ஆசைகளுக்கு
உருவங் கொடுத்து உலவ விடுபவனை
இரக்கம், கோபம், ஆற்றாமை, வெறுப்பினை
உமிழும் கண்கள்
வெறித்துப் பார்க்கின்றன

அவனுடைய வார்த்தைகள்
மெல்லப் புதைகிறது மௌனக் கல்லறையில்

காலத்தின் மாய வீச்சுக்குள்
கரைந்து கொண்டிருக்கிறது நிகழ்காலம்

கனவில் பெருகும் குருதித் துளிகளால்
தன் கடைசிக் கவிதையை அவன் எழுதத் தொடங்குகிறான்.


   




Saturday, December 10, 2011

ஊழிக்கூத்து

நன்றி: அம்ருதா



முலைகளில் இருந்து பீறிடுகிறது
செந்தழல் குழம்பு

வெடித்துப் பறக்கின்றன சதைத் துணுக்குகள்

காற்றில் அலைவுறும் மயிர்க்கற்றைகள்
அடித்துத் தெறிக்கிறது நிலவை

ஆற்றொணாத் துயரத்துடனும்
அடக்கவொண்ணாச் சீற்றத்துடனும்
பெருகும் நெருப்புக் குழம்பு
பரவுகிறது கானகமெங்கும்

ஒற்றைக் காலெடுத்து வானமளக்கிறேன்
சீற்ற மூச்சில் பறக்கின்றன நட்சத்திரங்கள்

அடுத்த அடியை மண்ணில் பதிக்க
வெடிக்கிறது பாதாளம்

துரோகக் கத்திகள் அறுத்தெடுத்த
சிரமேந்தித் தொடங்குகிறேன் ஊழிக்கூத்து.


Friday, December 9, 2011

உறைந்த காற்று

- தி. பரமேசுவரி


நன்றி: அம்ருதா


இன்றைக்கு
இந்தக் கணத்தில்
என் கதவுகளை இறுக மூடிக் கொள்கிறேன்

சற்று நேரமாயினும்
தொந்தரவு செய்யாமலிருங்கள்

ஏற்கெனவே இறுக்கிப் பூட்டப்பட்டிருக்கும்
சன்னல்களை என்றைக்கும் திறக்கப் போவதில்லை

சோற்றுப் பருக்கைக்குக் காத்திருக்கும்
அணில்களும் காகங்களும்
ஓரிரு நாட்களாவது என்னைத் தேடட்டும்

சிதறிக் கிடக்கும் மரமல்லியின் வாசம்
உள்நுழையாதபடிக்குக் காற்று உறைந்து போகட்டும்

மீண்டும் மீண்டும் தட்டிச் செல்லும்
சிட்டுக்குருவிகள் மீதும் இரக்கம் கொள்ளப் போவதில்லை

எப்பொழுதும் என்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும்
இருள்வெளிக்குள் மறையப் போகிறேன்
என்றைக்குமாக!

Thursday, December 8, 2011

கடற்கன்னி


- தி. பரமேசுவரி


நன்றி: அம்ருதா




மீன்களை மட்டுமே ஓவியம் தீட்டுவதென்று
உறுதி செய்துகொண்ட ஒருத்தி
வண்ணங்களைக் குழைத்துத் தூரிகையால் தீட்டுகிறாள்
வெவ்வேறு வடிவங்களில்
வேறுவேறு வண்ணங்களில்


மென்மையாய் நடக்கும் அவள் பாதங்கள் கூட
மணல்துகள்களில் வரையத் தொடங்குகின்றன மீன்களை


கண்களுக்குத் தீட்டும் மையாலும்
மீனாகவே உருமாற்றுகிறாள் கண்களை


ஆகாயத்தில் மிதக்கும் மேகங்களையெல்லாம்
மீனாகவே காணும் அவள் கண்கள்
காற்றிலும் கூட மீன் வரையத் துவங்கும் நாளில்
அவள் மாறத் தொடங்கியிருந்தாள்
ஒரு கடற்கன்னியென.

Monday, October 10, 2011

உள்ளங்கை குருவி

நன்றி: கல்கி

உள்ளங்கைகளில்
குருவி போன்றதொரு சிறிய பறவை
அமர்ந்திருக்கும் அந்தப் படம்
வெகுவாகக் கவர்ந்தது என்னை
இப்படியும் அப்படியுமாய் அசைக்கையில்
எழும்பும் அதன் சிறகுகள்தான்
அதை வாங்கத் தூண்டியதோ என்னவோ?
நீண்ட நேரம் விலை பேசி
கையிருப்பு முழுவதையும் செலவழித்து
வாங்கிய அந்தப் படத்துடன்
நடந்தே வீடு சேர்ந்தேன்
வாங்கிய நாளிலிருந்தே
அறைக்குள் நுழையும் போதெல்லாம்
அசைத்து அசைத்து அதன் பறத்தலுக்கான
யத்தனிப்பை ரசித்த எனக்கு
இப்போது அது அலைக்கழிப்பாக மாறியிருந்தது
இதோ இந்தக் கணத்தில்
நான் அதன் பறத்தலுக்காய்க் காத்திருக்கிறேன்.

- தி.பரமேசுவரி 

முகமூடியின் துளிகள்

நன்றி : கல்கி 





இளகத் தொடங்கும் என் முகமூடியை
இழுத்துப் பிடித்து முகத்தோடே
பொருத்திக் கொள்ளும் முயற்சியில்
மிகுந்த பிரயாசையுடன் ஈடுபட்டிருக்கிறேன்
சற்றும் செவி கொடுக்காத முகமூடி
சொட்டத் தொடங்கிற்று சிறு சிறு துளிகளென
இளகும் ஒவ்வொரு துளியும்
உன் பெயரைச் சொல்லியபடி வீழ
உரத்து ஒலிக்கும் உன் பெயரைக்
கேட்க மறுத்துக் காது பொத்த
வேகமாய் வழியும் துளிகள்
எழுதுகின்றன உன் பெயரை!

- தி.பரமேசுவரி 






Friday, February 4, 2011

கவிதைச் செடி


 



















உடல் முழுதும் அணுக்களெல்லாம்

வார்த்தைகளாய் மாறத்

தளிர்க்கிறது கவிதைச் செடி



ரத்தத்தை உறிஞ்சியபட


வளர்கிறது அசுரத்தனமாய்
 

 செடி மரமாகி


 விழுங்க முயல்கிறது


 துளிர்க்கத் தளிர்க்கப்
 

 போராடும் உடல்
 

மெல்ல மாறுகிறது
 

 கவிதை மரமென.

Wednesday, January 19, 2011

சிறகுகள் கோதும் சாளரம்

                                            மேலும் தீட்டிக் கூராக்குகிறது

                                            சிறிய மூக்கை

                                            தொட்டி நீரில் அமிழ்த்திக்

                                            கோதுகிறது சிறகுகளை

                                            தானியங்களைக் கொத்தியும்

                                            நீர் குடித்தும் பறந்தும்

                                            எழுந்தும் அணைத்தும்

                                            செய்யும் சில்மிஷங்கள்

                                            குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்

                                            செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை



                                            சன்னலில் பதித்த முகத்தில்

                                            பதியும் கோடுகள்

                                            வலிக்க வலிக்க

                                            ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

Tuesday, November 16, 2010

ஞாயிற்றின் மகள்

ஞாயிற்றின் மகள் நான்
என் உடலில் இருந்து
வெப்பத் திவலைகள் வெளியேறுகின்றன
நிலவின் மகனை
அருகழைத்து அணைக்கிறேன்
குளிர்தரு நிழல் அடைய

என் வெப்பம் அவனைப் பற்ற
நட்சத்திரங்களை அரவணைக்கிறான்
என் உடலுதிர்க்கும் கங்குகளே
நட்சத்திரங்களாகும்
என உணராமல்

சிறு சிறு கங்குகளாய்
எனை உதிர்த்துச்
சேர்கிறேன் உன் நிழலில்
வெப்பம் சற்றே தணிந்ததொரு தருணத்தில்
மீண்டும் கங்குகள் சேர்த்து
உருப்பெறுவேன்.

Saturday, July 31, 2010

பின் சென்று முன்


நன்றி:  புதுகைத் தென்றல்
º¢Ú ž¢ø ¸ðÊ ¯ÕñÎ
ºñ¨¼Â¢ð¼ §¾¡Æý
ÀûÇ¢ô ÀÕÅò¾¢ø Ó¾ø ¸Ê¾õ ¾óÐ
þ¼õ À¢Êò¾Åý
À¢ýÉ¡ø «¨ÄóР
¦À¡ØÐ¸û ¦¾¡¨Äò¾
¸øæ¡¢ ¿ñÀý
þýÉÓõ ®ÃÁ¡ö þ¾Âò¾¢ø
þô§À¡Ð ¸½ÅÛõ
ÓðÊ §Á¡Ð¨¸Â¢ø
Ó¸õ ÍǢ쨸¢ø
Àò¾¢ÃÁ¢ýÈ¢ «¨Ä¸¢ÈÐ ÁÉÍ
À¢ý ¦ºýÚ Óý ¾¢ÕõÒõ
°ºÄ¡ð¼ò¾¢ø ¸Æ¢¸¢ÈÐ Å¡ú쨸.

நட்சத்திரப் பயணம்


நன்றி:  உயிர்மை
´ü¨È ¿ðºò¾¢Ãõ
Á¢ÛÁ¢ÛòÐ즸¡ñÊÕìÌõ
À¡¨Ä þÃÅ¢ý ÝðÊø
¦Åõ¨Á âòÐì ¸¢¼ì¸¢ÈÐ
ÅÆ¢ò Ш½Â¡ö Åó¾
ÌÕðÎô¦Àñ¨½ì ¨¸ Å¢ðÎ
´ð¼¸ò¾¢ø Å£üÈ¢ÕìÌõ «Ãº ÌÁ¡¡¢Ô¼ý
À½õ ¦¾¡¼÷¸¢È¡ý ÅÆ¢ô§À¡ì¸ý
þÕñ¼ Å¡Éò¾¢ø
Á¢ÛÁ¢ÛòÐ Á¨ÈóРŢð¼
¿ðºò¾¢Ãò¾¢ý ¸£ÆÁ÷óÐ
¦º¡øÄ¡Áø ¦ºýÈ ÅÆ¢ô§À¡ì¸Û¼ý
¯¨Ã¡Êì ¦¸¡ñÊÕ츢ȡû
ÌÕðÎô ¦Àñ.

Wednesday, June 23, 2010

மனதின் நாக்குகள்

நன்றி: அவள் விகடன்


என்

உள் மனதின் நாக்குகள்

என்றும்

உன் பெயர் சொல்லியபடி.

முகம் மட்டும்

மௌனக் கலவையால் ஒட்டப்பட்டு.

மனங்கொத்திப் பறவை

நன்றி: ஆனந்த விகடன்

கொத்திக் கொண்டே இருக்கிறது

மனங்கொத்திப் பறவை

உருளும் விழி நீர்த் துளிகளைத்

தன் உணவாக்கிக் கொண்டு.

சுற்றிச் சிறை பிடித்திருக்கின்றன

வசைச் சொற்கள்

கண்களின் கூர்மை தாளாமல்

சிறு கத்தி கொண்டு

சிதைக்கிறேன்

துண்டு துண்டாய்ச்

சிதைகிறது உடல்.

பதப்படுத்தப்பட்ட முகம்

நன்றி : ஆனந்த விகடன்

மிகுந்த கவனத்துடன்

புருவங்களைச் செப்பனிடுகிறேன்

பல வகைக் களிம்புகளால்

பதப்படுத்தப்பட்ட முகத்தில்

வண்ணப் பூச்சு

கண்களில் மை தீட்டி

அழகு படுத்துகிறேன்

ஓவிய வேலைப்பாடுகளுடன்

நெற்றியில் குங்குமம்

காதோர லோலாக்கும்

கை வளையல்களும்

புடவை வண்ணத்துடன்

கை குலுக்கிக் கொண்டு.

கட்டிய புடவையைத்

திருத்தம் செய்கையில்

நின்று சிரிக்கிறது நிர்வாணம்.

Tuesday, June 22, 2010

யானைப் பள்ளம்

நன்றி: அணி

அடர்ந்த வனாந்தரத்தில்

சுற்றி அலைகிறேன்

வெளியேறும் வழியறியாமல்

சிக்கித் தவித்து

நசுங்கி விழும் உடல்

யானைப் பள்ளத்துள்

முட்டி மோதி எதிரொலிக்கின்றன

கூக்குரல்கள்

சிதறும் மணல் துகள்கள்,

நடுங்கும் கால்கள்

வருகை நோக்கும் விழிகள்

குழிக்குள் அலையும் உடலைத்

தூக்கி நிறுத்தும் மென்கரங்கள்

பசியாறும் உடல் தடவி

சற்றே தளர்ந்து ஆசுவாசிக்கையில்

மீள குழிக்குள் தள்ளிக்

கையுதறி நடக்கின்றன வன்கால்கள்.

விளையாட்டு

நன்றி: ஆனந்தவிகடன்

கட்டங்களுக்கிடையில் கால் வைத்துக்

கண்மூடி ஆடுகிறாள்

கோடு தொடாமல்

பாண்டியாட்டம்

சுற்றிச் சுற்றித் தேடினாலும்

கிடைக்கமாட்டாள் அக்கா

ஜெயித்துக் கொண்டேயிருப்பாள்

கண்ணாமூச்சி ஆட்டம்

எந்த ஆட்டமானாலும்

ஜெயிக்கும் அக்கா

கண்திறந்தே தோற்றாள்

அப்பாவின் தப்பான ஆட்டத்தில்.

வெக்கை

நன்றி : தாமரை ஜூன் 2010

ஏதோ நானிருந்தேன்

என் வழியில்

என் கனவில்

என் உலகில்

எனக்கு மட்டுமேயான என் பரப்பில்

நீ நுழைந்தாய்

காற்று நுழையும் துவாரமும் இன்றி

அடைபட்டிருந்த என் வெளியில்

உனை அனுமதித்தேன்

என் காற்றானாய்

கண்ணானாய்

நீர்ப்பரப்பானாய்

இறுக்கத்தின் வெக்கை தாளாமல்

வெளியேறும் உன்னோடு

என் மூச்சும்

உயிர்த்தல்

நன்றி: தாமரை ஜூன் 2010


மறுதலிப்பின்

உறுதியானதொரு பக்கத்தைப்

பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய்

அவ்வப்போது சொடுக்குகையில்

அதன் வீரியம்

வரிவரியாய் முதுகுகளில்

மௌன நிராகரிப்புகள்

உடலெங்கும் குருதி கசியச் செய்கையில்

எந்தச் சலனமுமின்றி

வெறிக்கிறாய் சிறு கண்களால்

சிறு முட்களெனச் செருகும்

மறுதலிப்புகளையும்

நிராகரிப்புகளையும்

நகர்த்தி விட்டுப் படியிறங்குகிறேன்.

பயணம்

நன்றி : தாமரை ஜூன் 2010


கண்ணாடிச் சில்லுகள்

பதிக்கப்பட்ட மதில்களில்

சிறிதும் சேதாரமின்றி

நகர்கிறது நத்தை

மௌனத்தின் இடைவெளிகளை

இட்டு நிரப்பியபடி.