Friday, December 9, 2011

உறைந்த காற்று

- திபரமேசுவரி


நன்றி: அம்ருதா


இன்றைக்கு
இந்தக் கணத்தில்
என் கதவுகளை இறுக மூடிக் கொள்கிறேன்

சற்று நேரமாயினும்
தொந்தரவு செய்யாமலிருங்கள்

ஏற்கெனவே இறுக்கிப் பூட்டப்பட்டிருக்கும்
சன்னல்களை என்றைக்கும் திறக்கப் போவதில்லை

சோற்றுப் பருக்கைக்குக் காத்திருக்கும்
அணில்களும் காகங்களும்
ஓரிரு நாட்களாவது என்னைத் தேடட்டும்

சிதறிக் கிடக்கும் மரமல்லியின் வாசம்
உள்நுழையாதபடிக்குக் காற்று உறைந்து போகட்டும்

மீண்டும் மீண்டும் தட்டிச் செல்லும்
சிட்டுக்குருவிகள் மீதும் இரக்கம் கொள்ளப் போவதில்லை

எப்பொழுதும் என்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும்
இருள்வெளிக்குள் மறையப் போகிறேன்
என்றைக்குமாக!

2 comments:

  1. ஏன் இந்த உள்ளிருப்பு போராட்டம் ....

    ReplyDelete
  2. Is it what we call 'Moral Vengeance of an Ascetic'?...

    ReplyDelete