Monday, June 25, 2012

இரண்டாம் ஆப்பிள்

நன்றி : கல்கி

நிசப்தமான அந்தக் காட்டுக்குள்தான்
இன்னும் சுற்றித் திரிகின்றனர் ஆதாமும் ஏவாளும்
இப்போது அவர்கள் தழைகளாலான
ஆடையுடனும் அணிகலன்களுடனும்..

அணில்களும் தும்பிகளும் உள்நுழைந்து
வெளியேறும் அந்தத் தொலைதூர வீடு
அவர்களுடையது.

பெயரிடப்படாத அவர்களின் குழந்தை
முயல்களுடனும் உள்ளான்களுடனும்
விளையாடிக் களிக்கிறது கொன்றை மரத்தின் கீழே.

இலைகளின் சலசலப்பே இசையாகும் ஒரு பொழுதில்
மீண்டுமொரு ஆப்பிள் கொடுக்கப்படுகிறது ஆதாமிடத்தில்.

ஒளி மங்கிய மாலையில்
இருளுடை தரித்த அக்குடும்பம்
பயணிக்கிறது மற்றொரு கானகம் தேடி...

2 comments:

  1. ஆம் வித்தியாச நோக்கு.
    அருமை சகோதரி .
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete