Monday, January 4, 2010

அப்பாவின் மரணம்

நீ குளிர்ந்து கொண்டிருக்கிறாய்…
அம்மாவும் கூட,
நீராட்டப்படுவதால்…

உனக்கும் விபூதி அபிஷேகம்,
மசாலையின் மருவல்
அம்மாவின் முகத்தில்…

உனக்கு அலங்காரம் நடக்கிறது
கன ஜோராய்…
அம்மாவுக்கும் புதுப்புடவை,
கண்ணாடி வளையல்கள்!

தாய் வீட்டுச் சீதனமெனப்
பகட்டைக் காட்டிடும் பட்டுப்புடவை
அம்மாவுக்கு…
தலை நிறையப் பூவும் பொட்டும்
அதிகப்படியாய்…

நீ குடித்தது மதுவை மட்டுமல்ல
அம்மாவையும்…
அழகான அம்மா
முக்காடிடப்பட்டு
கொலுப்பொம்மையென…

ஆடம்பரமான மலர் அலங்காரத்துடன்
பயணம் தொடங்குகிறாய்;
மரணம் யாருக்கு?

No comments:

Post a Comment