‘தோழா’ என விளித்துக்
குழைந்து நின்றால்
இடுக்குகள் தேடியும்
சந்துகள் பார்த்தும்
மேயும் கண்களை
மறைத்துக் கொண்டு
கைகளை வளைத்துப்
பின்னிணைத்துக் கோர்த்து
நெளியும் உடலை
ஒளித்துக் கொண்டு
‘அடுத்த சந்திப்பு எப்போது?’ என்பர்.
ஆடாது அசையாது
மீன் பிடிப்பவனுக்குத்
தக்கையின் மீதே கண்!
No comments:
Post a Comment