Tuesday, January 5, 2010

கோணல் இழை

நண்பனென்று நினைத்தவன்
இறுகி நிற்கிறான்
அடுத்தவனுடன் பேசுகையில்
சந்தேகமாய்ப் பார்க்கிறான்
அவன் அறியவில்லை
நட்பும் காமமும்
இழை வேறென்று
பின்னிய இழை
கோணலானதால்
மீண்டும் சிக்கெடுத்துமீண்டும் பின்னுகிறேன்.

No comments:

Post a Comment